Baktharudan Paaduven (பக்தருடன் பாடுவேன்)

பக்தருடன் பாடுவேன்
பரமசபை முக்தர்குழாம் கூடுவேன்

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் X 2
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான்
பக்தருடன் பாடுவேன்…

1 அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய்

பக்தருடன் பாடுவேன்… (Chorus)

2 இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே

பக்தருடன் பாடுவேன்… (Chorus)

3 தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள்

பக்தருடன் பாடுவேன்… (Chorus)

பக்தருடன் பாடுவேன்… X 4

Baktharudan Paaduven
Paramasabhai Muktharkuzhaam Kooduven

Anbaal Anaikkum Aruzhnaadhan Maarbinil X 2
Inbam Nugarndhizhai-ppaaruvor Kooda Naan
Baktharudan Paaduven…

1 Anbu Azhiyaadhallo Avvanname
Anbar En Inbargazhum,
Ponnadi Poomaanin Puththuyir Pettradhaal
Ennudan Thanguvaar Ennoozhi Kaalamaai

Baktharudan Paaduven… (Chorus)

2 Igamum Paramum Ondre Ivvadiyaarku
Agamum Aandavan Adiye,
Sugamum Narchelvamum Sutramum Utramum,
Igalillaa Ratchagan Inba Porpaadhame

Baktharudan Paaduven… (Chorus)

3 Thaayin Dhayavudaiyathaai Thamiyan Nin
Saeyan Kan Moodugaiyil,
Paayozhi Pasum Ponne, Bakthar Sindhaamani,
Thooyaa, Thiruppaadha Dharisanam Thandharuzh

Baktharudan Paaduven… (Chorus)

Baktharudan Paaduven… X 4

(Written by Dr.Savariraayan Yesudasan, Album- Unnatharae)

Back to index

Click below to listen to the song↓

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *