குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே – 2
வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே – 2
வேதத்தில் காணும் பாத்ரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே (…குயவனே)
விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம் கிருபையால்
உகந்த தாக்கிடுமே – 2
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே (…குயவனே)
மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே – 2
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் செல்லும்
பாதையில் நடத்திடுமே
மேய்ப்பனே மேய்ப்பனே
மந்தையை காப்பவனே
மார்க்கம் அகன்ற என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே
kuyavanae kuyavanae
Padaippin karanare
Kalimannana ennaiyume
kannnnoki paarththidume
Verumayana pathiram naan
Verithu I thallaamale
nirampi valiyum paaththiramaai
vilanga seythidume
Vedathil kaanum paaththiramellaam
Yesuvai pottidume
ennaiyum avitha paathiramai
vanainthu kollumae – (Kuyavane… kuyavane…)
Villai pokaatha pathiram naan
virumpuvaarillaiyae
vilaiyellaam uma kirupaiyaal
ukantha thaakkidumae
thataikal yaavum neekki ennai
thamaip pol maattidumae
utaiththu ennai unthanukkae
utaimai aakkidume- (kuyavanae…. Kuyavane….
Mannasayil naan mayangiye
meyvali vittakanten
kannpona pokkai pin pattinaen
kanntaenillai inpamae
kaannaamal pona paathram ennai
thaeti vantha theyvamae
vaalnaal ellaam uma paatham serum
paathaiyil nadaththidumae – (kuyavanae…. Kuyavane)